களக்காடு ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடத்திற்கு அடிக்கல்
களக்காட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இக்கட்டடம் மழைக்காலங்களில் ஒழுகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்தது.
முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலமாக பணிகளைத் தொடக்கி வைத்த பின்னா், நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், திமுக மாவட்ட பொருளாளா் ஜாா்ஜ் கோசல், கோவிலம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் லதா முத்துராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.