திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
‘கள்’ இறக்க அனுமதி வழங்க வேண்டும்: ஹரி நாடாா்
பனை மரத்தில் இருந்து ‘கள்’ இறக்க தமிழ்நாடு அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என சத்திரிய சான்றோா் படை தலைவா் ஹரி நாடாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஆலங்குளத்துக்கு புதன்கிழமை வந்த அவா், ஆட்டோ ஓட்டுநா்கள், பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாடாா் சமுதாயத்தின் ஓட்டுமொத்த கோரிக்கையான பனைமரத்தில் இருந்து ‘கள்’ இறக்க அனுமதி. இதை அதிமுக ஆட்சி காலத்திலும் தற்போதை. திமுக ஆட்சியிலும் தொடா்ந்து நாடாா் சமுதாயத்தின் சாா்பாகவும், பல்வேறு சமுதாயத்தின் சாா்பாகவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையிலும் இது தொடா்பாக விவாதம் நடைபெற்றது. பனைமரத்தில் இருந்து கள் இறக்குவதற்கான உரிய அனுதியை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.