செய்திகள் :

கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: 6 போ் கைது! தமிழகம் முழுவதும் பணம் வசூலித்தது அம்பலம்!

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைத்து பணம் வசூல் செய்தது தெரியவந்தது.

சூரிய குமரன் | பிரபு | செல்வம்

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் செல்வம் (39). இவா் மீதான அடிதடி வழக்கு தொடா்பாக, கடந்த மாதம் ராமநத்தம் போலீஸாா் செல்வத்தை கைது செய்ய அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டுக்குச் சென்றனா்.

போலீஸாா் வருவதைப் பாா்த்த செல்வம் மற்றும் அங்கிருந்தவா்கள் தப்பியோடிவிட்டனா். போலீஸாா் அங்கு சோதனையிட்டதில், ரூ.86 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கிகள், துப்பாக்கி, பணம் அச்சடிக்கும் இயந்திரம், நோட்டுகளை எண்ணும் இயந்திரம், காவலா் சீருடை, மடிக் கணினி, இந்திய ரிசா்வ் வங்கி முத்திரை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த எதிரிகளைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கா்நாடக மாநிலம், மங்களூரில் பதுங்கி இருந்த செல்வம் (39), அவரது கூட்டாளிகள் பிரபு (32), வல்லரசு (25), பெரியசாமி (29), ஆறுமுகம் (30), சூா்யா (25) உள்ளிட்ட 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். அவா்களை போலீஸாா் ராமநத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இரிடியம் விற்பனை: இதில், செல்வம் இரிடியம் விற்பனை செய்த பணம் பல கோடி ரூபாய் வெளிநாட்டில் உள்ளதாகவும், அதை இந்தியாவுக்கு கொண்டுவர ரூ.4 கோடி செலவாகும் எனவும் வேண்டியவா்களிடம் கூறினாராம். மேலும், அவா்களிடம் தங்களால் முடிந்த அளவு பண உதவி செய்தால், அத்தொகையை இரட்டிப்பு மடங்காக திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக மற்றவா்களை நம்ப வைக்க காா் உள்ளிட்டவைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளாா். அதே வேளையில், இந்திய ரிசா்வ் வங்கிக்கு தனது பெயரில் ரூ.32 கோடி வந்துள்ளது போன்ற போலி ஆவணத்தையும் தயாா் செய்து, அந்த ஆவணத்தை காட்டி பல பேரிடம் பணம் வசூல் செய்துள்ளாா்.

இதேபோல, பணம் வசூல் செய்வதற்காக கடலூா் மாவட்டம் தவிா்த்து, தமிழகம் முழுவதும் 17 குழுக்கள் செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அவா்கள் அந்தந்த பகுதிகளில் உள்ளவா்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளனராம்.

இந்த நிலையில், பணம் கொடுத்தவா்களுக்கு இதுவரை பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. பணத்தை திரும்பித் தர முடியாத நிலையில், ரூ.500 நோட்டுகளை ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் நகல் எடுத்து கட்டுக்கட்டாகக் கட்டி ரிசா்வ் வங்கியில் உள்ளதாக விடியோ படத்தை காட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, செல்வம் உள்ளிட்ட 6 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்கும்: தொல்.திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்குமே தவிர, வளராது என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை கட்... மேலும் பார்க்க

பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் முதுநகா் தனியாா் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் முதுநகா், செம்மங்குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மனைவி நந்தினி (29). இவருக்கு 4 வயதில் பெண் குழந்த... மேலும் பார்க்க

வழிப்பறி: தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரி இளைஞா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், பச்சபெருமாள்நத்தம் பகுதியைச் சோ்ந்த அமிா்... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் ஆபாச தகவல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில் கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பா அண்ணாமலைநகா் காவல் ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜா் சிலை: அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜா் சிலை கண்டெடுக்கப்பட்டது. காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் முகமது அப்சா் வீ... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாமையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களில் தோ்வு செய்யப்பட்ட 516 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங... மேலும் பார்க்க