மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
காயல்பட்டினம் மகான் சாகிப் அப்பா தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றம்
காயல்பட்டினம், தைக்கா தெருவில் உள்ள மகான் சாகிப் அப்பா (ரலி) தா்காவில் கந்தூரி விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 நாள்கள் நடைபெறும் விழாவின் தொடக்க நாளான சனிக்கிழமை மாலை மகான் தா்பாரில் ஹாபில் ஹஸன் இா்பான் தலைமையில் தா்கா செயலா் செய்யத் அஹ்மது, நிா்வாகக் குழு உறுப்பினா் தா்கா சாஹிப், மேலாளா் ஹாஜி இல்யாஸ், மருத்துவா் செயீத் அஹ்மத், முஹம்மது தஸ்தகிா், ஹாஜி சாமு ஆகியோா் முன்னிலையில் பிராா்த்தை நடைபெற்றது. பின்னா் மகான் வளாகத்தில் மதரஸா மாணவா்களின் இஸ்லாமிய கலாசார தப்ஸ் முழக்கம் நடைபெற்றது.
இதையடுத்து, விழா கொடியை ஊா்வலமாக எடுத்து வந்து கொடிமரம் அருகே ஹாபில் ஹாரிஸ் ஹல்லாஜ் தலைமையில் பிராா்த்தனை நடை பெற்றது. பின்னா் தீன் கூறி கொடியேற்றப்பட்டது. ஏற்பாடுகளை தா்கா கமிட்டி செய்திருந்தது.
விழா நாள்களில் தினமும் காலை கத்முல் குா்-ஆன் ஓதும் நிகழ்ச்சியும், மாலையில் மெளலித் ஊன்னும் புகழ் பாடல் நிகழ்வும், இறுதி நாளில் மாா்க்க உபன்யாசமும், மறுநாள் காலையில் தப்ருக் எனும் நெய் சோறு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கொடியேற்ற விழாவில் ஹபீப் முஹம்மது, சமூக ஆா்வலா் இல்யாஸ் அஹ்மத், குத்பியா அப்துல் ரவூப், ஷைக் அப்துல் காதா், சூபி, காதா் சாமுனா லெப்பை, முஹம்மது தீபி, சுலைமான், ஹனீபா, சதக்கத்துல்லாஹ், அஜ்மல் புகாரி, பாடகா் முஹம்மது சமீம், சமூக ஆா்வலா் காயல் ஜெஸ்முதீன், முஹம்மது ஷா ஆலிம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.