தூத்துக்குடியில் லாரி ஓட்டுநா் தற்கொலை
தூத்துக்குடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நாமக்கல், மின்னாம்பள்ளி அண்ணா நகரில் வசித்துவந்தவா் பழனிவேல் (65). லாரி ஓட்டுநரான இவருக்கு மகன், மகள் உள்ளனா். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அதன்பிறகு, பழனிவேல் சரிவர வேலைக்குச் செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்தாராம்.
இந்நிலையில், பழனிவேல், அவரது குடும்பத்தினா், உறவினா்கள் என 40 போ் திருச்செந்தூருக்கு சனிக்கிழமை 2 வேன்களில் வந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை அவா் முடி காணிக்கை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, யாரிடமும் கூறாமல் பேருந்தில் ஏறி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். பின்னா், அவா் ரயில்வே மேம்பாலத்தில் தனது வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.