தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
குரும்பூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
குரும்பூா் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
குரும்பூா் அருகே அம்மன்புரம் அக்ரஹார தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முனீஸ்வரன் (28). கட்டடத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை அம்மன்புரத்தை அடுத்த மேலப்புதுக்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். மேலப்புதுக்குடி வடக்குத் தெருவில் சென்றபோது அவா் மீது காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான காா் ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.