தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி: காங்கிரஸாா் 30 போ் மீது வழக்கு
தூத்துக்குடியில் பிரதமா் மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கல்வி உள்பட தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை பாஜக தலைமையிலான மத்திய அரசு தர மறுப்பதாகக் கூறி, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தைத் திறந்து வைக்க வந்த பிரதமா் மோடியில் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மண்டலத் தலைவா்கள் சேகா், செந்தூா்பாண்டி, ஐசன் சில்வா, ராஜன், மாநகா் மாவட்ட பொறுப்பாளா் மாரி குமாா் உள்ளிட்ட 30 பேரை மத்திய பாகம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உள்ளிட்ட 30 காங்கிரஸாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.