காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
காலிப் பணியிடங்களை நிரப்ப அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் வலங்கைமான் வட்டப்பேரவை அரசைக்கேட்டுக்கொண்டுள்ளது.
வலங்கைமானில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் வலங்கைமான் வட்டப் பேரவை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகி விஐயலெட்சுமி தலைமை வகித்தாா், மாவட்ட துணைத் தலைவா் திரிபுரசுந்தரி கொடி ஏற்றினாா்.
சிஐடியு மாவட்டச் செயலாளா் ரா. மாலதி தொடக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டத் தலைவா் பாலசுந்தரம், அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் பா.சித்ரா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட செயலாளா் அ.பிரேமா புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுறையாற்றினாா்.
புதிய தலைவராக விஜயலெட்சுமி, செயலாராக ஜெயசித்ரா, பொருளாராக விஜயாஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினராக ரெத்தினகுமாரி மற்றும் 10- போ் கொண்ட இணை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.