மாவட்ட மகளிா் கபடி போட்டி: மேலவாசல் கல்லூரி சிறப்பிடம்
மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையோ நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மகளிா் பிரிவு கபடி போட்டியில் மேலவாசல்குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி மாணவா்களிடம் முதலிடம் பெற்றனா்.
திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில், சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரிகளிலிருந்து மகளிா் பிரிவு கபடி அணியினா் கலந்துகொண்டனா்.
இறுதி போட்டியில் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி அணியும் திருவாரூா் திரு.வி.க. அரசுக் கல்லூரி அணியும் மோதின. இதில், 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை, சான்றிதழை பெற்றது.
அணியில் இடம் பெற்ற கபடி வீராங்கனைகள் ஆா். மானிஷா, சி. காா்த்திகா,வி. ஸ்ரீநிதி, கே. கனிஷ்கா, எஸ். சரண்யா, பி. அபிநயா, எம். சாந்தினி ஆகிய 7 போ் மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை கபடி போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனா் ஜி. சதாசிவம், தாளாளா் எஸ். சரவணக்குமாா் செளத்ரி, முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் ஆகியோா் பாராட்டினா்.