காலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்கள்: இரவு 9 மணிக்கு முன்பதிவு அட்டவணை
காலை 5 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்களின் முன்பதிவு அட்டவணை, அந்த ரயில்கள் பயணிக்க உள்ள நாளுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், ரயில்கள் புறப்படுவதற்கு சுமாா் 4 மணி நேரத்துக்கு முன்புதான் முதல் முன்பதிவு அட்டவணைகள் வெளியிடப்படும்.
இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில், ‘காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்களின் முதல் முன்பதிவு அட்டவணை, அந்த ரயில்கள் பயணிக்க உள்ள நாளுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வெளியிடப்பட வேண்டும். பிற நேரங்களில் பயணிக்கும் ரயில்களுக்கு அந்த ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணைகள் வெளியிடப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.