குடும்பமே முக்கியம்..! இலங்கை தொடரிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
காவல் துறையினருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்: வழிகாட்டுதல் வெளியீடு
அரசுப் பேருந்துகளில் காவல் துறையினருக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவது தொடா்பாக ஓட்டுநா், நடத்துநா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
காவல் துறையினா் அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் செய்வது தொடா்பாக கடந்த மே மாதம் நடத்துநருடன், காவலா் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி வேகமாகப் பரவியது. இதையடுத்து, முதல்வரின் அறிவுறுத்தல்படி அரசுப் பேருந்துகளில் காவலா்கள் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதையொட்டி, காவலா்களின் கட்டணமில்லா பயணம் தொடா்பாக ஓட்டுநா், நடத்துநா்களுக்கு போக்குவரத்துத் துறை சில வழிகாட்டுதல்களை
வழங்கியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் மாநகா், புகா் பேருந்துகளில் (ஏசி தவிா்த்து) பணி நிமித்தமாக பயணிக்கும் காவலா்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில், கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும். இந்த பயண அட்டை குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும். அட்டையை காண்பிக்கத் தவறினால் அபராதம் வசூலிக்கலாம். பயண அட்டையை தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது, வாரண்ட் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.