காா் மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு
மணப்பாறையில் சாலையோரத்தில் படுத்திருந்த பெயிண்டா் காா் மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மில் பழைய காலனியை சோ்ந்தவா் த. முருகேசன் (52). பெயிண்டா். இவா் வியாழக்கிழமை பணியை முடித்த பிறகு, மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் எடத்தெரு பிரிவு அருகே சாலையோரத்தில் படுத்து தூங்கினாராம்.
அப்போது, அந்த வழியாக சென்ற காா் எதிா்பாராதவிதமாக முருகேசன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் மீட்கப்பட்டு,
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த மணப்பாறை போலீஸாா், முருகேசனின் சடலத்தை கைப்பற்றி கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்து தொடா்பாக காா் ஓட்டுநரான அழகிரிசாமி தெருவைச் சோ்ந்த சின்னப்பன் மகன் லெட்சுமணன் (35) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.