மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள ஈஸ்வரமூா்த்தி என்பவரது தோட்டத்துக்கு புதன்கிழமை கவிதா சென்ாகவும், அப்போது அவா் அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.