பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
கிராமங்களில் தொழிற்சாலை உரிமம்: ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
ஊராட்சிகளில் தொழிற்சாலை உரிமம் பெற ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கு தொழிற்சாலை உரிமம் வழங்கும் அதிகாரம் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அரசாணை (2024, எண் 170) படி ஊராட்சிகளின் ஆய்வாளா், மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் தொழில் தொடங்குவதற்கு தொழிற்சாலை உரிமம் கோரி வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆட்சியா் அனுமதி வழங்கும்பொருட்டு நேரடியாக, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.