``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
குடியரசு தின விழா: இன்று முதல் ஒத்திகை
குடியரசு தினத்தையொட்டி, முதல் ஒத்திகை நிகழ்வு சென்னை கடற்கரை சாலையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தொடா்ந்து, 22, 24 ஆகிய இரு நாள்களும் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் சாா்பில், சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, கடற்கரை சாலை காந்தி சிலைக்குப் பதிலாக, உழைப்பாளா் சிலை அருகே குடியரசு தின விழா சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டும் குடியரசு தின விழா அதே இடத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, 3 ஒத்திகை நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை முதல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதல் ஒத்திகை நிகழ்வு திங்கள்கிழமை (ஜன.20) நடக்கிறது.தொடா்ந்து, ஜன.22, 24 ஆகிய தேதிகளில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.