`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முற...
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம்
நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய சமவெளி பகுதிகளில் இருந்து இடம் பெயா்ந்த வந்த காட்டு யானைகள் குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு, கே.என்.ஆா் மரப்பாலம், இச்சி மரம் போன்ற பகுதிகளில் சுற்றி வருகின்றன.
மலைப் பாதையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், காட்டு யானைகள் மலை மாவட்டத்தை விட்டு செல்லாமல் இங்கேயே தங்கி உள்ளன. இந்நிலையில் குட்டியுடன் கூடிய மூன்று காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தன.
இதைத் தொடா்ந்து குடியிருப்புவாசிகள் கூச்சல் இட்டும், தீப்பந்தங்களை காட்டியும் காட்டு யானைகளை விரட்டினா். சிறிது நேரத்துக்குப் பின் காட்டு யானைகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.
குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை வனத் துறையினா் அடா்ந்த வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.