மழையிலும் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறை நாளையொட்டி உதகை படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறும் குடை பிடித்தவாறும் ஞாயிற்றுக்கிழமை மிதிபடகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்துக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.
இந்நிலையில் வார விடுமுறை நாளையொட்டி உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சாரல் மலையில் நனைந்தவாறு மிதிபடகுகளில் குடைகளை பிடித்தபடி படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.