குமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி நகராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளா் ஜெரால்டு மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினா்.
கன்னியாகுமரி சன்னதி தெரு, கடற்கரைச் சாலை, முக்கடல் சங்கமம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடைபெற்றது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பா் கப் மற்றும் பிளாஸ்டிக் கிண்ணங்கள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இனிமேலும், விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.