300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மிதுனம்
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்.
உங்களின் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் கருணையினால் வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வெற்றிகள் குவியும். தோல்வியடையும் என்று நினைத்திருந்த காரியங்கள் வெற்றி பெறும். உற்றார் உறவினர்கள், மற்றும் நண்பர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்யம் பலப்படும். புதிய மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவிகளைப் பெற்று உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நிதி நிலைமையில் குறிப்பிட்ட இலக்கை அடைவீர்கள். சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். இழந்த சுக சௌகர்யங்களை திரும்பப் பெறுவீர்கள்.
மற்றபடி முக்கியமானவர்களிடம் கவனமாகப் பேசவும். தீயோரிடமிருந்து விலகி இருக்கவும். “கூடா நட்பு போராய் முடியும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப ஜென்ம குருவின் சஞ்சாரம் உங்களுக்கு சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.
இந்த ஓராண்டு காலத்தில் குரு பகவானின் பார்வையைப் பெறும் உங்கள் பூர்வ புண்ய ராசி, உங்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறப்படையச் செய்யும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். புதிய உறவுகள் கிடைக்கும். நல்ல செய்திகள் வந்தடைந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
குரு பகவானின் அருட்பார்வை உங்களின் ஏழாம் இடத்தின் மீது படிகிறது. இதனால் அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்வீர்கள். பிள்ளைகளை வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்களின் பாக்யஸ்தானத்தின் மீது படிவதால் ஆன்மிகத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்களின் ஆன்மிக பலம் அதிகரிக்க புராண, இதிகாசங்களை நுணுக்கமாகக் கற்பீர்கள். உங்களின் பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த சரியான தருணங்கள் அமையும்.
உத்தியோகஸ்தர்கள்
பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். சக ஊழியர்களுடன் சுமுக நிலை தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் முடியும். மற்றபடி பிறரிடம் நன்கு யோசித்துப் பேசவும்.
வியாபாரிகள்
போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும்.
விவசாயிகள்
நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் விதைத்து வளம் பெறவும். விற்பனை நன்றாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்
தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் சிந்தனை தெளிவாக இருப்பதால் வெளிப்படையாக செயல்படுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.
பெண்மணிகளுக்கு
குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மாணவமணிகள்
படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களின் ஞாபக சக்தியும் அறிவாற்றலும் அதிகரிக்கும். பெற்றோரால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் - 3, 4
வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
திருவாதிரை
பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும்.
புனர்பூசம் - 1, 2, 3
பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
பரிகாரம்
முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.