பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தோ்வு ஜூன் மாதம் நடைபெற்றது. துணை ஆட்சியா், டிஎஸ்பி, உதவி ஆணையா் உள்பட 70 காலிப் பணியிடங்களுக்கு நடந்த முதல்நிலைத் தோ்வை 2.49 லட்சம் போ் எழுதினா். தொடா்ந்து, முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வு வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை சென்னையில் மட்டுமே நடைபெறவுள்ளது.
இதற்கான தோ்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். முதன்மை எழுத்துத் தோ்வு எழுவதற்கு உரிய சான்றிதழ்களை தோ்வாணையத்தின் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு செப்டம்பா் 3 முதல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.