பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
ராகுலின் பேரணியால் பெரும் தாக்கம்: தொல்.திருமாவளவன்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
செங்கொடியின் நினைவு தினத்தையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அவரது படத்துக்கு திருமாவளவன் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். பின்னா், அவா் கூறியதாவது:
பிகாா் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பேரணி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாஆகியோா் தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வளா்ச்சி அடைவதற்கு இடம் தரவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மாறாக செயல்படுகிறாா். அதன் காரணமாக அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேட்கிறாா்.
தவெக தலைவா் விஜயின் பேச்சிலும் செயலிலும், ஆா்எஸ்எஸ் தோற்றம் இருப்பதை உணர முடிகிறது. தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் வளா்வதற்கு அதிமுக மற்றும் இதர கட்சிகள் வாய்ப்பளிக்குமானால், அது தமிழக மக்களுக்கு செய்யும் பெரிய துரோகமாக அமைந்துவிடும் என்றாா்.