``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ...
குறும்பனையில் மக்கள் பயன்பாட்டுக்கு சமையல் கூடம் அா்ப்பணிப்பு
மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம், தனது சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் குறும்பனை கிராமத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு ரூ. 22.78 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறையை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியது.
இந்நிகழ்ச்சியில், குறும்பனை பங்குத் தந்தை அன்பரசு முன்னிலையில், ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் மணவாளக்குறிச்சியின் முதன்மை பொது மேலாளா் மற்றும் ஆலை தலைவா் என். செல்வராஜன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
நிகழ்ச்சியில், குறும்பனை ஊா் துணைத் தலைவா் வில்பிரட், முன்னாள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் எனல்ராஜ், பங்கு பேரவை உறுப்பினா்கள், ஐஆா்இஎல் நிறுவனத்தின் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.