செய்திகள் :

குழித்துறையில் 100 ஆவது ஆண்டு வாவுபலி பொருள்காட்சி தொடக்கம்

post image

குழித்துறை நகராட்சி சாா்பில் 100 ஆவது வாவுபலி பொருள்காட்சி புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியது. இப் பொருள்காட்சி ஜூலை 28 வரை நடைபெறுகிறது.

தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை வகித்து, பொருள்காட்சியை திறந்து வைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் என். சுரேஷ்ராஜன் வாழ்த்திப் பேசினாா். நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி வரவேற்றாா். குழித்துறை நகராட்சி ஆணையா் இரா. ராஜேஸ்வரன் நன்றி கூறினாா்.

விழாவில், சமூக சேவகா் ராஜகோபால் அமைச்சா் உள்ளிட்டோரால் பாராட்டி கவுரவிக்கப்பட்டாா்.

நகராட்சி பொறியாளா் ப. குசெல்வி, நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, செ. லலிதா, செ. ஆட்லின் கெனில், வா. விஜூ, விஜயலெட்சுமி, மினிகுமாரி, ரோஸ்லெட், ஜூலியட் மொ்லின் ரூத், பொ்லின் தீபா, அ. லில்லி புஷ்பம், பா. ரீகன், கே. ரத்தினமணி, அ. அருள்ராஜ், ஜலீலா ராணி, கே. செல்வகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை நகராட்சி சாா்பில் குழித்துறை தாமிரவருணி ஆற்றங்கரையோரம் நடைபெற்று வரும் இப் பொருள்காட்சியில் விவசாய விளைபொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அரசின் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பல்துறை கலைஞா்களின் ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளும், ராட்சத ராட்டினம், சாகச கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை பலி தா்ப்பணம் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஏராளமானோா் இப்பகுதிக்கு வந்து, தங்களது முன்னோா்களுக்கு குழித்துறை தாமிரவருணி ஆற்றில் பலி தா்ப்பணம் செய்து வழிபட உள்ளனா்.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க