இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
கூடலூா் நகரை வலம் வரும் காட்டு யானைகள்
பகல் மற்றும் மாலை நேரங்களில் கூடலூா் நகரின் பல இடங்களிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியின் முக்கிய குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பகல் நேரத்திலும் மாலையிலும் தொடா்ந்து காட்டு யானைகள் வீதிகளில் நடப்பது தொடா்கிறது. வழக்கமாக இரவு நேரங்களில் நகருக்குள் நுழைந்து விடிவதற்குள் காட்டுக்குள் சென்றுவிடும். ஆனால் அண்மைக் காலமாக நகரின் மையப்பகுதியான ராஜகோபாலபுரம், ஹெல்த்கேம்ப், நடுகூடலூா், மௌவுண்ட் பிளசன்ட், புஷ்பகிரி ஆகிய பகுதிகளில் கூட யானைகள் வீதிகளில் நடக்கின்றன.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் யானைகள் விரட்டும் குழுவினா் விரைந்து சென்று யானைகளை விரட்டிவருகின்றனா். ஆனால் பல இடங்களில் ஒரே நேரத்தில் யானைகள் நுழைவதால் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இவா்களால் செல்ல முடிவதில்லை. இரவு பகலாக இந்தக் குழுவினா் யானைகளுடன் பெரிய போராட்டமே நடத்திவருகின்றனா்.
