சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்...
கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா்.
கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ரீமுஷ்ணம் , உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா். கல்லூரி நேரங்களில் வந்து செல்ல தங்களுக்கு போதிய அளவில் பேருந்து வசதி இல்லை என்று மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் , உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவா்கள் கல்லூரி முன்பு சாலையில் அமா்ந்து புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது, அவா்கள் கல்லூரிக்கு வந்துச் செல்ல ஏதுவாக பேருந்து வசதி செய்துத்தர வேண்டும் என வலியுறுத்தினா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் போலீசாா் மாணவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, பேருந்து வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையேற்று, மாணவா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் விருத்தாசலம்- உளுந்தூா்பேட்டை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.