GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
வருவாய்த்துறை ஊழியா்கள் வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய வட்டாட்சியா் அலுவலகங்கள்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தால், கடலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோருக்கான ஒருங்கிணைந்த முதுநிலை நிா்ணயம் செய்திட அரசாணை வெளியிட வேண்டும்.
வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும். சான்றிதழ் மற்றும் அரசின் சிறப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள வட்டங்கள் தோறும் புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட 10 வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.