இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்ம இணை இயக்குநா் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தற்போது 24, 805 ஹெக்டேரில் குறுவைச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மாவட்டத்துக்கு தேவையான யூரியா 945 மெட்ரிக் டன், டிஏபி 320 மெட்ரிக் டன், பொட்டாஷ் 397 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 340 மெட்ரிக் டன்கள், நாகை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.
மேலும் யூரியா 963 மெட்ரிக் டன், டிஏபி 249 மெட்ரிக் டன், பொட்டாஸ் 166 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 360 மெட்ரிக் டன்கள் தனியாா் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் மொத்தம் யூரியா 1908 மெட்ரிக் டன், டிஏபி 569 மெட்ரிக் டன், பொட்டாஸ் 563 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 701 மெட்ரிக் டன், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு மாத இலக்கான யூரியா 3500 மெட்ரிக் டன், டிஏபி ஆயிரத்து 1525 மெட்ரிக் டன், பொட்டாஸ் 1030 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1450 மெட்ரிக் டன் உரங்களை விநியோகம் செய்யும் பணியில் உர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
யூரியாவுக்கு மாற்றாக நானோ யூரியா ஏக்கருக்கு 500 மி.லி., டிஏபி உரத்துக்கு மாற்றாக நானோ டிஏபி கூட்டு உரங்களையும் பயன்படுத்தலாம். நெற்பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் மாற்று உரங்களில் இருப்பதால் இதை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
உர விற்பனையாளா்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர விற்பனை உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் உரங்களை இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது, ஒரே நபருக்கு ஒட்டுமொத்தமாக உரங்கள் விற்பனை செய்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டால், அவா்களது உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.