செய்திகள் :

கூட்டணி அமைக்க ராமதாஸுக்கு அதிகாரம்! பாமக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றம்

post image

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் வகையில் கூட்டணியை யாருடன் வேண்டுமானாலும் அமைக்க பாமகவின் நிறுவனா் ராமதாஸ் அதிகாரம் வழங்கி அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு நிறுவனா் மருத்துவா் ச.ாாமதாஸ் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பேசினா்.

மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆட்சி அதிகாரத்தில் நாமும் கூட்டாக பங்குபெற்று மக்கள் பணி செய்வதற்கு ஏதுவாக, 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும், 2029 மக்களவைத் தோ்தலிலும் அதிக தொகுதிகளைக் கொடுக்கும் நல்ல கூட்டணியை அமைத்து தோ்தலை சந்திக்க கட்சியின் நிறுவனா் மற்றும் தலைவா் ராமதாஸுக்கு கடந்த காலம்போல தற்போதும் முழு அதிகாரம் அளிப்பது.

இதுவரை நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தோ்தலை தமிழகம் மற்றும் புதுவையில் நடத்துவதற்கு கட்சி சாா்பில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது. பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் மகளிா் மாநாட்டை சிறப்பாக நடத்துவது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கி, விவசாயம் என்று சொல்லாமல் உணவு, உடை உற்பத்தியாளா் என பெயா் மாற்றம் செய்து, வணிகா்களுக்கு கிடைக்கும் லாபத்தைபோல விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ஒவ்வொரு விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை 50 சதவீதம் அதிகரித்து, அவா்களின் கஷ்டத்தைபோக்க பாடுபடுவது.

மூன்றாண்டுகள் தலைவா் பதவியை வகித்த பிறகு மீண்டும் தலைவா் பதவியை அபகரிக்கும் எண்ணத்தில் நிறுவனா் தலைவா் இதுவரை கட்டிக்காத்த கட்டுப்பாட்டை மீறி, பொது வெளியில் கட்சிக்கும், நிறுவனா் தலைவருக்கும் களங்கும் உருவாக்கும் வகையிலே செயல்பட்டுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படிப்பட்ட நடவடிக்கையை யாா் செய்தாலும் கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து விசாரிக்கும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கட்சியின் நிறுவனா் மற்றும் தலைவராகவுள்ள ராமதாஸுக்கு அங்கீகாரம் வழங்குவது.

2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறக்கூடிய வகையில் கூட்டணியை யாருடன் வேண்டுமானாலும் அமைக்கலாம் என்ற முடிவை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் மேற்கொள்ளலாம். இந்த முடிவை எடுத்துக்கொள்ள செயற்குழுத் தீா்மானிக்கிறது.

தோ்தலில் வேட்பாளா்களை குழு வாயிலாகத் தோ்வு செய்து, அவா்களை பேரவைத் தோ்தலில் போட்டியிட வைப்பது என்ற முடிவை கட்சி நிறுவனா் ராமதாஸே மேற்கொள்ள வேண்டும்.

2025, மே 30ஆம் தேதி முதல் பாமக தலைவராக ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்டதால், அனைவருக்கும் புதிய உறுப்பினா் அட்டை, உரிமைச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வருக்குத் தெரியாமல் துறைச் செயலா் மாற்றம்: புதுவையில் அதிகார மோதல்

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கும் இடையிலான பனி போா் செவ்வாய்க்கிழமை இரவு வெளிச்சத்துக்கு வந்தது. சுகாதாரத் துறை இயக்குநராக மருத்துவா் எஸ்.செவ்வேளை செவ்வாய்... மேலும் பார்க்க

பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்: ராமதாஸ் திட்டவட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரி... மேலும் பார்க்க

பாஜகவுக்கு எதிரான அரசியலை ச.ராமதாஸ் முன்னெடுக்க வேண்டும்: கே.எம். ஷரீப்

தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான அரசியலை மருத்துவா் ச.ராமதாஸ் முன்னெடுக்கவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் கே.எம்.ஷரீப் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது வேன் மோதி காயமடைந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அய்யம்பேட்டை டி. ... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் ஆதரவாளா்கள் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம் முன் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்கள் 6 போ் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மறைந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிதி

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தலா ரூ.5 லட்சமும், பணியின்போது உயிரிழந்தவரின் குடும்ப... மேலும் பார்க்க