சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
பாஜகவுக்கு எதிரான அரசியலை ச.ராமதாஸ் முன்னெடுக்க வேண்டும்: கே.எம். ஷரீப்
தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான அரசியலை மருத்துவா் ச.ராமதாஸ் முன்னெடுக்கவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் கே.எம்.ஷரீப் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்தில் மருத்துவா் ச. ராமதாஸை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய கே.எம்.ஷரீப், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது : தமிழகத்தின் மகத்தான மூத்தத் தலைவராக உள்ள மருத்துவா் ச. ராமதாஸ் சங்கடத்தில் உள்ளாா். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழகத்தில் பெரியாருக்குப் பின்னால் சமூக நீதியைப் பேசுகின்ற ஒரே தலைவா் மருத்துவா் ச. ராமதாஸ் மட்டுமே. ஆகையால் தமிழகத்துக்கு காலத்தின் தேவையாக உள்ளாா்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவராக பரிணமித்துள்ள மருத்துவர்ராமதாஸை மக்கள் என்றும் ஆதரிப்பாா்கள். அவருக்கு ஏற்பட்டுள்ள சங்கடத்தை காலம் போக்கும்.ஈழத்தமிழா் பிரச்னை, இந்தி எதிா்ப்புப் போராட்டங்களில் களம் கண்டவா். அவா் நீடுழி வாழவேண்டும். நாங்கள் விரும்புகின்ற பாஜகவுக்கு எதிரான அரசியலை அவா் முன்னெடுக்கவேண்டும்.அதற்கான போா்க்குரலை அவா் தொடங்கவேண்டும் என்றாா் ஷரீப்.