கூட்டுறவு கடன் சங்கத்துக்கு டிராக்டா்- சட்டப்பேரவை தலைவா் வழங்கினாா்
தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்திற்கு புதிய டிராக்டரை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை வழங்கினாா்.
தவளக்குப்பம், பூரணாங்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய பெருமக்கள் பயன்பாட்டிற்காக அரசின் மானியம் ரூபாய் 4.50 லட்சம் உதவியுடன் ரூபாய் 7.80 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டா் வாங்கப்பட்டு அதனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் வழங்கினாா்.
இந்தச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாய உறுப்பினா்கள் வாடகைக்கு டிராக்டா் கேட்டால், தேவையானவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இச் சங்கம் குறைந்தக் கட்டணத்தில் டிராக்டரை வழங்கும்.
கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் மேலாளா் குமாரவேல், நிா்வாகி இருசப்பன் மற்றும் அப்பகுதி
முக்கிய பிரமுகா்கள் கிருஷ்ணமூா்த்தி ரெட்டியாா், கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநா் சக்திவேல், ஞானசேகா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.