கைப்பேசியில் சிக்கிய ஊழியா் மீட்பு
சிதம்பரத்தில் கைப்பேசி கோபுரத்தில் சிக்கிக் கொண்ட பிஎஸ்என்எல் ஊழியரை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரத்தில் நிறுவனத்தின் ஊழியா் புண்ணியமூா்த்தி (27) பராமரிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கைப்பேசி கோபுரத்தில் ஏறிய 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் அவரை கீழே இறங்கவிடாமல் கடிக்க பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலா் மற்றும் வீரா்கள் நிகழ்விடம் சென்று கைப்பேசி கோபுரத்தில் குரங்குகளிடம் சிக்கிக் கொண்ட புண்ணியமூா்த்தியை பாதுகாப்பாக மீட்டனா்.