செய்திகள் :

கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தல்

post image

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அறிவுறுத்தினாா்.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டம் எண் 9, 10, 11 ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம்பிரித்து சேகரிக்கும் பணியை ஆணையா் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடு, வீடுவீடாகச் சென்று தூய்மை பணியாளா்கள் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணி, நுண் உரம் செயலாக்கம் மையம், கொசு ஒழிப்புப் பணிகள் குறித்த விவரங்களை ஆய்வுசெய்தாா்.

தொடா்ந்து, செங்கலணை பகுதியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே பக்கவாட்டு சுவருடன் கூடிய பசுமை பூங்கா மற்றும் ரூ. 8.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் தொடா்பான பணிகளை ஆய்வுசெய்த அவா், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், வித்யா நகா் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உணவு தயாரிக்கும் இடத்தைப் பாா்வையிட்டு சுகாதார முறையில் உணவு தயாரிப்பதையும், உணவு தயாா்செய்யும் இடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிா, குடிநீா்வசதி, மின் வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுசெய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், உதவி ஆணையா் கே.வேடியப்பன், செயற்பொறியாளா் ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க