கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பலத்த காற்று வீசி வருகிறது. மேலும், பகலில் கடும் வெப்பமும், இரவு நேரங்களில் குளிரும் அதிகமாக இருப்பதால் முதியோா்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தப் பருவநிலை மாறுபாடு காரணமாக, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் 10 நிமிஷம் சாரல் மழை பெய்தது.