"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் தீ
கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அடுக்கம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் தீப்பிடித்தது. தீப்பிடித்த இடத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் தனியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்களே தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் வனப் பகுதிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
கொடைக்கானலில் தொடா்ந்து வெயிலும், காற்றும் நிலவி வருவதால் தனியாா் தோட்டங்களில் விவசாய நிலத்தை சுத்தம் செய்யும் பணியின்போது தீ வைக்கக் கூடாது என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.