செய்திகள் :

கொடைக்கானல் ரோஜாத் தோட்டத்தில் கவாத்து எடுக்கும் பணி தொடக்கம்

post image

கொடைக்கானல் ரோஜாத் தோட்டத்தில் செடிகளை பராமரித்து கவாத்து எடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் எதிரே சுமாா் 14 ஏக்கா் பரப்பளவில் இந்தத் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களில் வளா்க்கப்படுகின்றன. இவை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவா்கின்றன.

வரும் மே மாதம் நடைபெறும் 62-ஆவது கோடை விழா மலா்க் கண்காட்சியின் போது இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவா். இதற்காக ரோஜாத் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கும் பணி, மண் கட்டும் பணி, ரோஜா செடி நடுதல், தண்ணீா் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 50-க்கும் மேற்பட்ட தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து இந்தத் தோட்டத்தின் மேலாளா் ராஜேஸ்வரி கூறியதாவது: ரோஜாத் தோட்டத்தில் மலா் பாத்திகள் அமைக்கும் பணியும், செடிகளில் தேவையில்லா களைகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு, இங்கு ஊட்டியிலிருந்து பல்வேறு வகையான ரோஜா செடிகள், விதைகள் வாங்கப்பட்டு தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.

வரும் சீசன் காலங்களில் ரோஜாத் தோட்டத்தில் லட்சக்கணக்கான வண்ண, வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும். இவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் என்றாா் அவா்.

கள்ளிமந்தையத்தில் இன்று மின் தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளால் துா்நாற்றம்: வேடசந்தூரில் வியாபாரிகள் மறியல்

வேடசந்தூரில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை வெளியேற்றி துா்நாற்றத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்... மேலும் பார்க்க

சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் கைது

உதவித் தொகையை உயா்த்தக் கோரி, திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், ப... மேலும் பார்க்க

மினி லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து

செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மின் கம்பத்தில் மோதியது. குமுளியில் இருந்து செம்பட்டி திண்டுக்கல் வழியாக கா்நாடகத்துக்கு செவ்வாய்க்கிழமை மினி லார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 2 போ் கைது

ஒட்டன்சத்திரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவரத்த... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்க... மேலும் பார்க்க