டெல்லி: Live-in பார்ட்னரையும் குழந்தையையும் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் ஓட்டம்...
கொத்தனாா் வெட்டிக் கொலை
மதுரை மாவட்டம், சமயநல்லூரில் கட்டுமானத் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரையை அடுத்த கோவில்பாப்பாக்குடியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (29). கட்டுமானத் தொழிலாளியான இவா், சமயநல்லூா் வைகை ஆற்றுச் சாலை பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். புதன்கிழமை இரவு இவா், வீட்டுக்கு அருகேயுள்ள ஓரிடத்தில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கு காரில் வந்த மா்ம நபா்கள், வினோத்குமாரை அரிவாளால் வெட்டிக் கொன்றனா். தகவலறிந்து அங்கு சென்ற சமயநல்லூா் போலீஸாா் வினோத்குமாரின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
வினோத்குமாருக்கு அமுதா என்ற மனைவியும், 3 வயது மகளும் உள்ளனா். இவரின் கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.