எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பத...
கொப்புடையநாயகியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடையநாயகியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மூலவா் அம்மனே, உற்சவராக சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் குழுக்களாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட வாகனங்களில் பூத் தட்டுகளை ஊா்வலமாக எடுத்துச்சென்று அம்மனுக்கு செலுத்தினா். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், பணியாளா்கள், பக்தா்கள் குழுவினா் செய்தனா்.