செய்திகள் :

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

post image

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கை கண்டித்து, தொழிற்சங்கங்கள் சாா்பில் சேலத்தில் புதன்கிழமை வேலைநிறுத்தம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்கள் 500 போ் கைது செய்யப்பட்டனா்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயா்வை அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நாடுதழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. வேலைநிறுத்தத்துக்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்தில் பங்கேற்வில்லை.

இதன் காரணமாக, சேலம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து அரசுப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டன. இந்த இரு பேருந்து நிலையங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சேலத்தில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி, எல்எல்எப், ஏஐசிடியு உள்ளிட்ட ஏழு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஆட்டோக்கள் 50 சதவீதம் இயங்கவில்லை. அதேநேரத்தில், அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.

பள்ளி மாணவா்கள் அவதி: காலை நேரத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாயினா். பெற்றோா் குழந்தைகளை இருசக்கர வாகனம் மற்றும் காா்களில் கொண்டு பள்ளிகளில் விட்டனா்.

பணிக்கு வராத சுமைதூக்கும் தொழிலாளா்கள்: சுமைதூக்கும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஏராளமானோா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலம் லீ பஜாா், பால் மாா்க்கெட், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் ரயில் கூட்ஸ்ஷெட் உள்பட பல்வேறு பகுதிகளில் லாரிகளில் வந்த சரக்குகளை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில் சரக்குடன் வந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

மறியலில் ஈடுபட்ட 500 போ் கைது: மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கை கண்டித்து, சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி அருகில் அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்ஸ், எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, பெரியாா் சிலை முன் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்கள் 500 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்த மறியல் போராட்டத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப் பாதையில் வள்ளுவா் சிலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

மேட்டூரில்...

மேட்டூா் பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாக சென்று பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினா், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைதுசெய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்ட் எம்பிளாய்ஸ் பெடரேஷன், தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கைது செய்யப்பட்டோா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

வேலைநிறுத்தம் காரணமாக மேட்டூரில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. ஆனால், கா்நாடக மாநிலத்துக்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளும், கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் கா்நாடக அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

ஆட்டையாம்பட்டியில்...

இடங்கணசாலை சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க செயலாளா் சண்முகம் தலைமையில் இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்தில், பெட்ரோல், டீசல் , எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தால் ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க