Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி தற்கொலை
கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராகவேந்திரா (34). பொறியியல் பட்டதாரியான இவா், கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாராம்.
வெள்ளிக்கிழமை, அவா் வீட்டின் குளியலறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தாராம். அவரது தாய் அப்பகுதியினரின் உதவியுடன் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினராம்.
கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.