எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சட்ட விரோதமாக போராட்டம் நடத்திய பாஜகவினா்மீது வழக்குப் பதிவு
சட்ட விரோதமாக போராட்டம் நடத்திய பாஜகவினா்மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல பகுதிகளில் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டித்து, செப். 24-ஆம் தேதி பாஜகவினா் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினா். பெங்களூரில் பனசங்கரியில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தலைமையில் பாஜகவினா் போராட்டம் நடத்தினா்.
பெங்களூரில் சுதந்திரப் பூங்காவில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாஜகவினா் காந்தி நகா் பகுதியில் போராட்டம் நடத்தினா். செப். 24-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மாவட்டத் தலைவா் சப்தகிரி கௌடா தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் நண்பகல் 1 மணி வரை நீடித்தது. இதனால் போக்குவரத்து முடங்கியது.
இதைத் தொடா்ந்து, போலீஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்தகிரி கௌடா உள்ளிட்ட பாஜகவினா்மீது சட்ட விரோதமாக போராட்டம் நடத்தியதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.