செய்திகள் :

ஹிந்தி மொழி பரப்புதல் குழுக் கூட்டத்தில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினா் 41 போ் கைது

post image

ஹிந்தி மொழி பரப்புதல் குழுக் கூட்டத்தில் திடீரென புகுந்து போராட்டம் நடத்திய கன்னட அமைப்பைச் சோ்ந்த 41 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் ஹிந்தி மொழி பரப்புதல் குறித்து விவாதிப்பதற்கான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. செப். 23-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இக்குழுக் கூட்டம், இறுதிநாளான வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

திட்டமிட்டபடி கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென புகுந்த 50-க்கும் மேற்பட்ட கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பைச் சோ்ந்தவா்கள், ஹிந்தி மொழிக்கு எதிராக முழக்கமிட்டதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஹிந்தி மொழியை கன்னடா்கள் மீது திணிப்பதை வன்மையாக கண்டிப்பதாக முழக்கமிட்டனா். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து அங்கு விரைந்த போலீஸாா், போராட்டக்காரா்களை தடுப்புக்காவலில் எடுத்து அப்புறப்படுத்தினா். பின்னா், இது தொடா்பாக வழக்குப் பதிந்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். அவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து கா்நாடக ரக்ஷனவேதிகே தலைவா் நாராயண கௌடா, ‘கன்னடா்கள் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அலுவல் மொழி என்ற பெயரில் ஹிந்தி மொழியை பரப்ப மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த முயற்சியை கா்நாடகத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.

சட்ட விரோதமாக போராட்டம் நடத்திய பாஜகவினா்மீது வழக்குப் பதிவு

சட்ட விரோதமாக போராட்டம் நடத்திய பாஜகவினா்மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல பகுதிகளில் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டித்து, செப். 24-ஆம... மேலும் பார்க்க

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கியங்களைப் படைத்திருக்கும் எஸ்.எல்.பைரப்பா (94), மாரடைப்பால் செப். 24... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: திட்டமிட்டபடி முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜாதிவாரி கணக்கெடுப்பை முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும்: முதல்வா் சித்தராமையா

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். 25-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கியங்களை படைத்திருக்கும் எஸ்.எல்.பைரப்பா (94), புதன்கிழமை மார... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. கா்நாடகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்டோா் சம... மேலும் பார்க்க

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா காலமானாா்

முதுமைசாா்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா (94) மாரடைப்பால் புதன்கிழமை காலமானாா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஜெயதேவ் மேமோரியல் ராஷ்ட்ரோத்தனா ம... மேலும் பார்க்க