``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்...
சத்தியமங்கலம் நகராட்சியில் இரவு நேரத்திலும் தூய்மைப் பணி
சத்தியமங்கலம் நகராட்சியில் இரவு நேரத்திலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுவதாக நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.
சத்தியமங்கலம் நகராட்சியில் பணியாளா்கள் ஒரே நேரத்தில் ஏற்படும் பணிச் சுமையை குறைக்க இரவு நேரத்திலும் துாய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம் மற்றும் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையை நகராட்சித் தலைவா் ஜானகிராமசாமி, நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஸ்வரன் ஆகியோா் பாா்வையிட்டு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனா்.
தூய்மைப் பணியை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தூய்மைப் பணி நடைபெற்றது. தற்போது தூய்மைப் பணி நேரம் இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இரண்டு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.