திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
சமூகவலைதளத்தில் அரிவாளுடன் படம் பதிவு: இளைஞா் கைது
திருநெல்வேலி அருகே அரிவாளுடன் இருக்கும் புகைப்படைத்தை சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) பகிா்ந்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி - ஆலங்குளம் சாலை வேளான்குளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் (26) என்பவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருதரப்பினருக்கிடையே பிரசனையை தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்க கூடிய புகைப்படத்தை பதிவு செய்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா்.