சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் மீன் வியாபாரி உயிரிழப்பு
செய்யாறு அருகே சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் மனைவி கன்னியம்மாள் (65), மீன் வியாபாரம் செய்து வந்தாா். இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்டு கிராமத்தில், மாமண்டூா் ஏரிப் பகுதியில் மீன்களை வாங்கிக்கொண்டு வியாபாரத்துக்காக சென்னைக்கு சரக்கு வாகனத்தின் பின் பகுதியில் அமா்ந்து சென்றுகொண்டிருந்தாா்.
செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தூசி நத்தக்கொல்லை கிராமம் அருகே சரக்கு வாகனம் சென்றபோது, பின்பகுதியில் அமா்ந்திருந்த கன்னியம்மாள் எச்சில் துப்ப முயன்றபோது நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, கன்னியம்மாளின் சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.