3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
சர்வதேச அளவிலான அங்கீகாரங்களை டிரம்ப் அழிக்கிறாரா? நெட்டிசன்கள் கேள்வி!
வட அமெரிக்காவில் உள்ள டெனாலி மலைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் மாற்றம் செய்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே கனடா, கிரீன்லாந்து நாடுகளை அமெரிக்காவுடன் இணைக்க முயன்ற டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்யுமாறு வற்புறுத்தினார்.
இந்த நிலையில், பதவியேற்ற சில நாள்களிலேயே மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்ததுடன், தற்போது வட அமெரிக்காவில் உள்ள மிக உயரமான மலையான டெனாலி மலையின் பெயரையும் மாற்றியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் வில்லியம்ஸ் மெக்கின்லியின் நினைவைப் போற்றும்விதமாக, அவரது பெயரையே டெனாலி மலைக்குச் சூட்டி, மெக்கின்லி மலை என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இதையும் படிக்க:ராகுல், மோடி, அமித் ஷாவை நேர்மையற்றவர்களாகச் சித்திரித்த ஆம் ஆத்மி!
அமெரிக்க பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், அமெரிக்க வரலாற்று நாயகர்கள் மற்றும் வரலாற்று சொத்துகளை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் நோக்குடன்தான் இவ்வாறான பெயர் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ’பூர்வீக மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்தான் இவை’ என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.