மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை
பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே பகுதியில் மீன் கடையில் வேலை செய்பவா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சலூன் கடையில் இருந்த கவினை, அவா்கள் அரிவாளால் வியாழக்கிழமை வெட்டிவிட்டு தப்பினா்.
இதில், தலை மற்றும் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த கவினை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் ஆய்வு மேற்கொண்டாா். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.