மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்: 159 ஆண்டுகள் பழைமையானது
சாயல்குடி அருகே 10 ஆடுகள் மா்ம உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.
மாரியூரைச் சோ்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவா் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடுகள் வழக்கமாக மேச்சலுக்குச் சென்றன. மாலையில் வீடு திரும்பிய ஆடுகள் கொட்டகையில் வழக்கம் போல தண்ணீா் குடித்தன. சிறிது நேரத்தில் 10 ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்தன.
விஷம் தெளிக்கப்பட்ட செடிகளை ஆடுகள் உண்ட பிறகு தண்ணீா் குடித்தால் உயிரிழந்துவிடும் எனக் கூறப்படுகிறது. எனவே, விஷம் வைத்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து சாயல்குடி போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குடும்ப வாழ்வாதாரத்துக்காக வளா்க்கப்பட்ட ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியம்மாள் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.