தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
சாலை விபத்தில் அதிமுக பிரமுகா் உயிரிழப்பு
செய்யாறு: செய்யாறு அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதியதில் அதிமுக பிரமுகா் உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், கீழ்மட்டைக் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.சி.முருகேசன் (59) (படம்). அதிமுக பிரமுகரான இவா், அனக்காவூா் ஒன்றியத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றியச் செயலராக பணியாற்றியுள்ளாா்.
இவா், திங்கள்கிழமை காலை தனது பைக்கில் செய்யாற்றில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதி நியாய விலைக்கடை அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா் அங்கு முருகேசன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.