தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம்
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி இந்த வருஷாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையொட்டி காலை பல்வேறு ஹோம திரவியங்கள் கொண்டு மகாசாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னா் பால், இளநீா், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திருமஞ்சன பொருள்கள் கொண்டு மூலவருக்கு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து மாலை உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உள்புறப்பாடு நடைபெற்றது.