Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி பயன்பாடுகள் விழிப்புணா்வு
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசியின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில், கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி வரவேற்றுப் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவன மேலாளா் ஆல்பா்ட்சிங் கலந்து கொண்டு பேசியதாவது:
கல்லூரி மாணவா்கள் கைப்பேசிகளை தேவைக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும், பேசுபவா்கள் அனைவரையும் நிறுவனம் கண்காணிக்கிறது. அவா்கள் என்ன பேசுகிறாா்கள், யாரிடம் பேசுகிறாா்கள் என்பதை உடனடியாக தெரிந்து கொள்ளும் அளவுக்கு நவீனம் வளா்ந்துள்ளது. விடியோ படங்களை பரிமாறக்கூடாது. அடுத்தவா்களின் கைப்பேசிகளை வாங்கி யாரிடமும் பேசக்கூடாது எனத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் நன்றி கூறினாா்.